தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒருமணி நேரத்தில் 60க்கும் மேற்பட்டோரைக் கடித்த நாய் - Coimbatore District News

கோவையில் போக்குவரத்து பெண் காவலர் உள்பட 60 க்கும் மேற்பட்டோரை 1 மணி நேரத்தில் கடித்து விட்டு தப்பிச் சென்ற வெறிநாயால் பரபரப்பு நிலவியது.

கடித்த ரேபிஸ் தொற்றுள்ள வெறிநாய்
ஒருமணி நேரத்தில் 60க்கும் மேற்பட்டோரைக்

By

Published : Oct 30, 2021, 7:05 AM IST

கோவை:அன்னூரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த பெண் காவலர் உள்பட 60 க்கும் மேற்பட்டோரை 1 மணி நேரத்தில் கடித்து விட்டு தப்பிச் சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து காவலரைக் கடித்தது

கோவை மாவட்டம், அன்னூரில் வியாழக்கிழமை (அக்.28) மாலை பேருந்து நிலையம் அருகே வந்த தெரு நாய் ஒன்று அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொன்மணி என்ற பெண் காவலரை கடித்து குதறியது.

இதனையடுத்து, அங்கிருந்து அவினாசி சாலை வழியாக ஓடிய அந்த நாய் சாலையில் சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்துவிட்டு, அவிநாசி சாலைக்குச் சென்றது.

60 க்கும் மேலானவரை கடித்தது

பின்னர், குன்னத்தூராம்பாளையம், ஊத்துப்பாளையம், கருவலூர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த நாயை பொதுமக்கள் விரட்டி சென்ற போது அந்த வெறிநாய் கோவை மாவட்ட எல்லையில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர் பகுதிக்குள் சென்றது.

இதனையடுத்து, அந்த நாயை பிடிக்க, அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்ட நிலையில் அங்கிருந்தும் தப்பி ஓடியது. கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் புகுந்த நாயைப் பிடிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் குவிந்த மக்கள்

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர், அந்த தெரு நாயைத் தேடி வருகின்றனர். மேலும், சாலையில் செல்வோர் தெரு நாயை பார்த்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் 1 மணி நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததால் அனைவரும் ஒரே நேரத்தில் அன்னூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். மேலும், அன்னூர் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய வணிகவரி கோட்டங்கள் நடப்பாண்டில் தொடங்கப்படும் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details