கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3இல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஆனந்தன், அதிமுக சார்பில் கருப்பசாமி உள்பட 11 போட்டியிட்டனர். வாக்கு எண்ணும் பணி நேற்று (அக். 12) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை பெற்றுவந்தார்.
ஒன்பதாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆனந்தன் 26,292 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்புசாமி 13,251 வாக்குகளும் பெற்றனர்.
ஸ்டாலினின் திசை நோக்கி மக்கள்
ஒன்பதாவது சுற்று முடிவின்படி, திமுக வேட்பாளர் ஆனந்தன் 13,041 வாக்குகள் அதிமுக வேட்பாளரைவிட அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
வெற்றிச் சான்றிதழைப் பெறும் திமுக வேட்பாளர் ஆனந்தன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றி திமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து செய்தியாளரிடம் பேசிய ஆனந்தன், "இது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அவருடைய நல்லாட்சிக்கு கிடைத்த சான்று.
கொங்கு மண்டலம் மீண்டும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றியடைய செய்துள்ளனர். இந்த வெற்றி திமுகவுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஸ்டாலினின் திசையை நோக்கிச் செல்கிறார்கள் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!