கோவை மாவட்டம் பொன்னான்டம்பாளையம் கிராமத்தில் 4 உள்ளாட்சி அமைப்புகள் வருவதால், அதனை ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரக்கோரி அக்கிராம மக்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலப் பொறுப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கிராம மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான அரசாக உள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கை திமுகவினர் தான் முதன் முதலில் வெளிப்படுத்தி போராட்டம் மேற்கொண்டனர். தற்போது பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணி நகரச் செயலாளர் அருளானந்தம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. காவல்துறை விசாரணை மேற்கொண்டு இருந்தால் இந்த கைது நடந்திருக்காது.