தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லாட்டரி சீட்டு விற்பனையில் கைதான திமுக பிரமுகர் - undefined

தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்பனை செய்தது தொடர்பாக பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தொண்டர் அணி இணை செயலாளர் பாபா முருகேசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்பனையில் கைதான திமுக பிரமுகர்
லாட்டரி சீட்டு விற்பனையில் கைதான திமுக பிரமுகர்

By

Published : Jul 27, 2021, 2:34 PM IST

கோவை: பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 27) புளியம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

அதனடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்டுள்ள கேரளா, சிக்கிம் போன்ற லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த திமுகவை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட தொண்டர் அணி இணை செயலாளர் பாபா முருகேசனிடமிருந்து 150க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர் ஆன்லைனிலும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவருகிறாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நண்பர்கள் பணத்திற்கு விலை போய் விட்டார்கள்' - துரைமுருகன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details