கோவைமாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், திமுக கூட்டணி 97 வார்டுகளையும் அதிமுக 3 வார்டுகளையும் கைப்பற்றிய நிலையில், கோவையில் உள்ள மண்டலத் தலைவருக்கான தேர்தல் இன்று (மார்ச் 30) நடைபெற்றது.
கோவையில் மண்டலங்களுக்கான தேர்தலில் 5 திமுவினர் போட்டியின்றித் தேர்வு! - போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களுக்கான தலைவர் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திமுக சார்பில் வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல், தெற்கு மண்டலத்திற்கு தனலட்சுமி, கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மீட்பு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
ஆட்டோ ஓட்டுநர்-கவுன்சிலர்: திமுக கூட்டணியில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த ஐந்து பேரும் மண்டலத் தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார். வடக்கு மண்டலத் தலைவராக தேர்வான கதிர்வேல் ஆட்டோ ஓட்டுநராக இருந்து கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகராட்சி மண்டலத் தலைவர் தேர்தலில் 3 அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதையும் படிங்க: பழங்கால நடராஜர் சிலை மீட்பு