தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அவிநாசி தொகுதியை அதியமானுக்கு ஒதுக்கியதற்கு திமுகவினர் எதிர்ப்பு - கோவை செய்திகள்

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி ஆதி தமிழர் பேரவைக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் அன்னூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்
சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

By

Published : Mar 11, 2021, 8:30 PM IST

கோவை: திமுக கூட்டணியில் உள்ள ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அவ்வமைப்பின் நிறுவனர் அதியமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதைக் கண்டித்து கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

அப்போது, 50க்கும் மேற்பட்ட திமுகவினர் அவிநாசி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அவிநாசி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் எனவும், சபாநாயகர் தனபால் மீது அதிருப்தி உள்ள நிலையில் திமுக போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் தெரிவித்தனர்.

மேலும், அத்தொகுதியில் ஆதி தமிழர் பேரவைக்கு பெரிய அளவில் கட்சி கட்டமைப்பு இல்லை என்பதால் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் யாரேனும் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:'கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு வழங்கக்கூடாது'- அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details