தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அகற்றிய திமுக கவுன்சிலர்!

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை திமுக கவுன்சிலர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலர்
திமுக கவுன்சிலர்

By

Published : Apr 23, 2022, 6:22 PM IST

கோவை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. அதிமுகவைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (ஏப்.23) வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அப்படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது, திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமரின் புகைப்படத்தை அகற்றினார்.

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம்
மேலும், ஆட்சியர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களிலேயே பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படுவதில்லை என்ற போது விடுமுறை நாளான இன்று அனுமதியின்றி பாஜகவினர், பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துச் சென்றுள்ளதாக கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அனுமதி பெற்றுவந்தபின், பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், பேரூராட்சி தலைவர் இருக்கும் போதே திமுக கவுன்சிலர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details