கோவை இதயதெய்வம் மாளிகையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துவதற்காகவே கார்த்திகேய சிவசெனாபதியை அங்கு நிறுத்தி திமுக கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது தேர்தல் விதிமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை. மேலும் அங்கு சென்று தேர்தல் அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
தொண்டாமுத்தூரில் தேர்தலை நிறுத்த திமுக சதி! - தொண்டாமுத்தூர் தொகுதி
கோவை: தொண்டாமுத்தூரில் தேர்தலை நிறுத்துவதற்காகவே கார்த்திகேய சிவசேனாபதியை திமுக களமிறக்கியுள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
admk
தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவரால் வெல்ல முடியாது என்பதால், மக்களிடம் பொய் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கார்த்திகேய சிவசேனாபதிக்கு தொண்டாமுத்தூர் தொகுதியின் தெற்கு வடக்கு கூட எதுவெனத் தெரியவில்லை. இத்தொகுதியில் அவர் டெபாசிட் கூட பெற முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு வழங்குவதில் குளறுபடி- அப்பாவு புகார்
Last Updated : Mar 18, 2021, 10:35 PM IST