கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு விதங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி சரவணம்பட்டி பகுதி 11வது வார்டு திமுக வேட்பாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி (BE பட்டதாரி) நேற்று (பிப். 10) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்தும், அங்குள்ள தேநீர்க் கடை ஒன்றில் பலகாரம் சுட்டும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.