கோயம்புத்தூர்: கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் "திருடர் குல திலகமே...ஊழலின் மறு உருவமே... அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்" என்ற வாசகம் இருந்தது.
பின், தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போல் காட்சிபடுத்தி இருந்தனர். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல், தராசு தட்டு அமைச்சருக்கு பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.