கோயம்புத்தூர்: தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் ஜிஎஸ்டி விலை உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட செயலாளர்கள் தண்டபானி, சிங்கை சந்துரு, தினகரன், சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் இதில் அதிமுக ஆட்சிக்கு வரும் முன் ஒன்று கூறியதாகவும் ஆட்சிக்குப் வந்த பிறகு அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது என்றும் கூறினர். மத்திய அரசு கேஸ் விலை, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதாகவும் கூறினர்.
இறுதியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் - 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்