தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூடுபிடிக்கும் 'முகநூல்' மாட்டிறைச்சி விவகாரம்! ஒருவர் கைது

கோவை: மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நிர்மல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DK Nirmalkumar arrested

By

Published : Jul 27, 2019, 6:24 PM IST

Updated : Jul 28, 2019, 8:25 AM IST

திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கடந்த 13ஆம் தேதி மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகவும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை முகநூலில் பதிவிட்டார்.

இது குறித்து மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டது நிர்மல் குமார் என்பது தெரியவந்தது.

நிர்மல்குமார் முகநூல் பதிவு

இதனையடுத்து, அவர் மீது இரு பிரிவினரிடையே விரோதம் ஏற்படுத்தும் விதமான கருத்துகளை பகிர்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அதன்பின் கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, நிர்மல்குமாரை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டதால், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Last Updated : Jul 28, 2019, 8:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details