கோயம்புத்தூர்: புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையினர் கஞ்சா விநியோகம் செய்துவந்த கஞ்சா வியாபாரிகள் சிலரை கைதுசெய்து விசாரணை செய்தனர். அதில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது கோவை ஆயுதப்படை காவலர் கணேஷ் குமார் என்பது தெரியவந்தது.
கஞ்சா விநியோகம் செய்த காவலர் பணியிடை நீக்கம்! - கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்
தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை விநியோகம் செய்த கோயம்புத்தூர் மாநகர ஆயுதப்படை காவலர் கணேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கஞ்சா விநியோகம் செய்த காவலர் பணியிடை நீக்கம்!
இதனையடுத்து தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை விநியோகம் செய்த காவலர் கணேஷ் குமாரை புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் காவலர் கணேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த 3ஆம் வகுப்பு சிறுவன்!'