தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ - திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவையை சார்ந்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ
இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ

By

Published : Jul 6, 2022, 10:24 AM IST

Updated : Jul 6, 2022, 12:20 PM IST

கோயம்புத்தூர்:திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்', `மாடத்தி' படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள 'காளி' எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் அமைந்துள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி காளி ஆவண படத்தின் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோவில் பேசி சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகிவுள்ள நிலையில் செல்வபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிரடி சரஸ்வதி மீது தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:‘காளி பட போஸ்டரை நீக்குங்கள்’ - கனடாவுக்கு இந்திய தூதரகம் கோரிக்கை

Last Updated : Jul 6, 2022, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details