கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் சிலர் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரம் கருதி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசுவின் தாய் லதா மற்றும் சபரிராஜனின் தாய் பரிமளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதில், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவில் விதிமுறைகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ்தான் விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.