கோயம்புத்தூரைச் சேர்ந்த சின்னவேடம்பட்டியில் உள்ள கெளமாரய மண்டபத்தில், நேற்று மாலை கெளமார மடாலயம் மற்றும் நவீன பிரபஞ்ச நடனக்குழு இணைந்து, ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற நடனகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, மண்சார்ந்த மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மரக்கன்றுகள், தேங்காய் தொட்டிகளை கையில் ஏந்தியவாறு நடனமாடினர்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சிபற்றி பேசிய, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நவீன், மண்சார்ந்த மரங்கள் நடவேண்டியதன் தேவைபற்றி பேசினார். மேலும் தாங்கள் தேங்காய்த் தொட்டிகளை சேகரித்து, காசிக்கு அனுப்பும் முயற்சியில் உள்ளதாகவும், ஒயில், கும்மி நடனங்கள், ஆதிகாலத்தில் பெயர்போன நடனங்கள் என்றும், அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.