தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இழுத்துச் சென்ற காவலர்கள் - வேளாண் சட்டங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

CPI protest against farm act at Gandhipuram in Coimbatore
CPI protest against farm act at Gandhipuram in Coimbatore

By

Published : Dec 7, 2020, 2:09 PM IST

Updated : Dec 7, 2020, 2:41 PM IST

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காந்திபுரம் அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

Last Updated : Dec 7, 2020, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details