தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் தாக்கல் செய்த மனுவில், “டிசம்பர் இரண்டாம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியனுக்கு சொந்தமான சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள், 11 பெண்கள் உட்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பட்டியலின மக்களைப் புறக்கணிக்கும் விதமாக 20 அடி உயரம், 80 அடி நீளத்துக்கு கட்டப்பட்ட சுவர் குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் இந்த விபத்து நடந்தது. மக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், டிசம்பர் 4ஆம் தேதி சுவர் உரிமையாளர் சிவசுப்ரமணியனை கைது செய்தனர்.
'மேட்டுப்பாளையம் உயிரிழப்பு: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய கோரிக்கை'
அதனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்களை அடையாளம் கண்டு நீக்க வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீண்டாமைச் சுவர் எனக் கூறப்படும் அந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா எனவும், சுற்றுச்சுவர் கட்டப்பட்ட போது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழுப்பக் கூடாது என விதிகள் ஏதும் இருந்ததா? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மரணம் விளைவித்தல் இல்லை! கொலைக்கு நிகரான மரணத்தை ஏற்படுத்துதல்!
மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம், அரசு அலுவலர்களை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.