கோவைதெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் ஓணம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினார். மலையாளம் மொழி பேசும் மக்கள் நிறைந்த தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில், பாரம்பரிய உடைகள் அணிந்து வீட்டில் அத்தப்பூ கோலங்களிட்டு திருவோணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, ராம் நகரிலுள்ள மலையாளம் பேசும் பாஜக நிர்வாகிகளின் இல்லத்தில் இன்று (செப்.8) நடந்த திருவோணம் பண்டிகைக் கொண்டாடத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.