தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் வரும் 24ஆம் தேதி முதல் போலீசார் நடத்தும் கிரிக்கெட் போட்டி - மாநகர காவல் ஆணையர் தகவல் - Cricket match will be held Covai

கோவையில் வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காவல்துறை, பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை
கோவை

By

Published : Sep 14, 2022, 7:02 PM IST

கோவை:பொதுமக்கள் இடையே உள்ள நட்புறவை வலுப்படுத்தவும், இளைஞர்களிடம் போதைப்பொருட்கள் பழக்கத்தை தடுப்பதற்காகவும் அவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே வரும் 24ஆம் தேதி கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (செப்.14) செய்தியாளர்களைச் சந்தித்தகோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 'வரும் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காவல் துறை, பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளதாகவும், இறுதிப்போட்டி வரும் அக்.2ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் காவல் துறையினர் சார்பில் 10 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 64 அணிகளும் பங்கேற்க உள்ளனர்.

காவல்துறை பொதுமக்கள் இடையே உள்ள நட்புறவை வலுப்படுத்தவும், இளைஞர்களை இதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வத்தை உறுதிப்படுத்தி, போதைப்பொருட்கள் பழக்கத்தை தடுப்பதற்காகவும் (போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு), விபத்து குறித்த விழிப்புணர்வு ஆகிய நோக்கங்களுக்காகவும் நடத்தப்படுகிறது.

கோவை கிரிக்கெட் அசோசியேசனும் பங்கேற்பதாக உள்ள இப்போட்டிகள் 4 இடங்களில் நடத்தப்படும். இதில் 8 ஓவர் உள்ள போட்டியாக நடத்தப்படும். டென்னிஸ் பந்து வைத்து நடத்த இருக்கிறோம். இதில், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், கிரிக்கெட் கிளப்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூ.25,000மும்; இரண்டாவது பரிசாக ரூ.15,000மும்; மூன்றாவது பரிசாக ரூ.10,000மும் வழங்கப்பட உள்ளது.

கோவையில் போலீசார் நடத்தும் கிரிக்கெட் போட்டி

இதில் பொதுமக்கள், காவல் துறை அணிகள் முதலில் தனித்தனியாக போட்டியிட்டதன் பின், இரு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்ட அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும். போதைப்பொருட்கள் விற்பனைத் தடுப்பு, கைது நடவடிக்கைகள் ஒருபுறம் சென்று கொண்டிருப்பதாகவும்; அதே சமயம் கல்லூரி போன்ற இடங்களில் விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் நூலகங்கள் மூலம் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் அதனை அதிகப்படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளை அண்ணாவின் பிறந்தநாளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details