தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செஸ் விளையாடிய கோவை கலெக்டர் - ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு செய்ய இப்படி ஒரு முயற்சி!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் சதுரங்கம் விளையாடினார்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

By

Published : Jul 19, 2022, 7:04 PM IST

கோவை:44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மக்கள் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளி மாணவ-மாணவியர்களிடையே செஸ் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் இன்று (ஜூலை 19) செஸ் விளையாடினர்.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோரும் சதுரங்கம் விளையாடினர். இந்நிலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.

செஸ் விளையாடிய கோவை கலெக்டர் - ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு செய்ய இப்படி ஒரு முயற்சி!

இதையும் படிங்க: திருப்பத்தூரில் கலை நிகழ்ச்சியுடன் சர்வதேச சதுரங்க போட்டி!

ABOUT THE AUTHOR

...view details