தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வுசெய்த ஆட்சியர் - கருப்புப் பூஞ்சை நோய்

கோவை: மாவட்டத்தில் கறுப்புப் பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வுசெய்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் பேட்டியளித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வுசெய்த ஆட்சியர்
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வுசெய்த ஆட்சியர்

By

Published : Jun 18, 2021, 7:42 PM IST

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் குழந்தைகள் சிறப்பு வார்டு, கரோனா சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் பிரிவு பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டார்.

பின் ஆட்சியர் கூறும்பொழுது, நான் பொறுப்பேற்றவுடன் கோவை கோவிட் சென்டர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆய்வு மேற்கொண்டதாகவும், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தற்பொழுது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 250 படுக்கை வசதி உள்ளது.

இதில் 171 பேர் மட்டுமே உள்ளனர். 79 படுக்கைகள் காலியாக உள்ளது. 80 பேருக்கும் மட்டும் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, இரண்டாம் அலையில் கோவையில் 4000 பேர் பாதிக்கப்பட்டு 38 சதவீதம் இருந்தது, படிப்படியாக குறைந்து தற்பொழுது 13 சதவீதமாகக் குறைந்துள்ளது, தினசரி நகர பகுதிகளில் 10 பேர் வீதமும் ஊராட்சி பகுதிகளில் 9 பேர் வீதமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் அலுவலர்கள் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று உள்ளவர்களை கோவிட் சென்டரில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும் முகக்கவசம், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குக்குப் பிறகு பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கறுப்புப் பூஞ்சை நோயினால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

மருந்து தட்டுப்பாடு இருந்தது தற்பொழுது இல்லை. கோவை மருத்துவக் கல்லூரியினர் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்தார், ஆய்வில் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details