கோயம்புத்தூர் மாவட்டம்மருதமலை சாலையில் உள்ள கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகவிடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி இன்று 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் உணவு தட்டுகளை முன்வைத்து தரமான உணவு வழங்கக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாரதியார் பல்கலை விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு... மாணவிகள் போராட்டம்... - கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Etv Bharat
இதுகுறித்து மாணவிகள் தரப்பில், "எங்களுக்கு வழங்கும் உணவில் புழுக்கள் உள்ளன. சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை கொடுக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே போராட்டில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மனைவி வற்புறுத்தி மாட்டுக்கறி கொடுத்ததால் கணவர் தற்கொலை