தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு! - கோயம்புத்தூர் செய்திகள்

கோவை: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளின் நிரப்பப்படாத இடங்களுக்கான துணை கலந்தாய்வு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

counselling
counselling

By

Published : Nov 18, 2020, 2:00 PM IST

Updated : Nov 18, 2020, 2:59 PM IST

2020-21 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளின் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. அதன்படி, எம்பிஏ-விற்கு நவம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரையிலும், எம்சிஏ-விற்கு நவம்பர் 6 முதல் 7 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் நிரப்பப்படாத இடங்களுக்கான துணை கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிரப்பப்படாத இடங்கள், விண்ணப்பித்து கலந்து கொள்ள முடியாமல் முந்தைய கலந்தாய்வை தவறவிட்டவர்கள், கல்லூரிகளை மாற்ற எண்ணுவோர் ஆகியோருக்காக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த துணை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு!

கலந்தாய்விற்கு வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியவும் கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் உடன் ஒருவர் (பெற்றோர், நண்பர்) மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் தொடங்கிய விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி!

Last Updated : Nov 18, 2020, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details