கோயம்புத்தூர்: தமிழ்நாடு எல்லையான வாளையாறில் லாட்டரி கடைக்குள் கட்டுப்பாடை இழந்து கண்டைனர் லாரி புகுந்தது. இதில் அதிஷ்டவசமாக இருவர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் - கேரள எல்லையான வாளையாறு வழியாக பாலக்காடு நோக்கி கண்டைனர் லாரி ஒன்று நேற்று (டிச.25) இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியை தாண்டி சென்ற போது லாரி ஓட்டுநர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி, அங்கிருந்த இருந்த லாட்டரி கடைக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருவர் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி இந்த விபத்தில் மயிரிழையில் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பியுள்ளனர். அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. லாரி நியூட்ரலில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாக வாளையாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் தவறான திசையில் பயணித்தவர் வேன் மோதி உயிரிழப்பு!