கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றனர்.
அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவையில் ஆலோசனை கூட்டம்! கோவை நீதிமன்றம் எதிரே அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கேட்டு கொடுத்துள்ள மனு மீது அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தீர்மானத்தின்படி வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி சிவானந்தா காலனி பகுதியில் கோரிக்கையை நிறைவேற்றும்படி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் டிசம்பர் 7ஆம் தேதியன்று அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த கோரிக்கை மீண்டும் மனுவாக அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கோவை வழக்கறிஞர் மோசடி மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பு