தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா குறித்து துணை சபாநாயகர் தலைமையில் கூட்டம் - பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

கோவை: கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா குறித்து துணை சபாநாயகர் தலைமையில் கூட்டம்
கரோனா குறித்து துணை சபாநாயகர் தலைமையில் கூட்டம்

By

Published : Mar 27, 2020, 10:08 PM IST

கோவை மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில், கரோன வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கவும், தூய்மை பணிகளை உரிய முறையில் மேற்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கரோனோ வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நகராட்சி அலுவலர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "பொள்ளாச்சி பகுதியை பொருத்துவரை கரோனா தொற்று யாருக்கும் இல்லை.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

இருப்பினும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை கண்டறிய அரசு மருத்துவமனையில் 40 படுக்கை அறைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேவைப்படும்பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளில் 25 விழுக்காடு படுக்கை அறைகள் தயார் செய்ய ஆவண செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’

ABOUT THE AUTHOR

...view details