கோயம்புத்தூர்: 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஏற்பட்ட குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு 24 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வீர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண்
இந்நிகழ்வில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வெல்லும் போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இதே பகுதியில் நினைவுத்தூண் வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”இந்து என்பது வாழ்வியல் முறை. பிற சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இந்து மதத்தை தவறாக சித்தரிக்கின்றனர். திமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் கோயில்கள் இடிக்கப்படும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் இரவில் நோட்டீஸ் கொடுத்து காலை கோயில்களை இடிக்கும் சூழல் உள்ளது
கடந்த எட்டு மாத கால திமுக அரசு அனைத்து மதங்களுக்குமான அரசாக இல்லை. அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி மறைக்க முயற்சிக்கிறது.
ஹிஜாப் விவகாரத்தில் அரசியல்