தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Covid Precaution: கோவையில் டிச. 10 வரை பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை - 15 days ban for public events in coimbatore

கோயம்புத்தூரில் டிசம்பர் 10ஆம் தேதிவரை எந்த ஒரு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் துறை, coimbatore city commissioner, மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், coimbatore police commissioner pradeep kumar
கோவை மாநகர காவல் துறை

By

Published : Nov 27, 2021, 6:12 AM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயம்புத்தூரில் சமீப காலமாக, பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் எவ்வித முறையான அனுமதி பெறாமல் பரப்பிவருகின்றனர்.

இந்தச் செயலானது மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதிப்பதாலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாலும் பொதுமக்களுக்குத் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.

15 நாள்களுக்கு அனுமதியில்லை

மேலும், கோயம்புத்தூர் மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டும், தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும்விதமாகவும் தமிழ்நாடு அரசின் கரோனா பெருந்தொற்று தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால், நவம்பர் 26ஆம் தேதிமுதல் டிசம்பர் 10ஆம் தேதிவரை எந்த ஒரு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

அனுமதியை மீறி மேற்கூறிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details