தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவில் தகுதியானர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை - மகளிரணி பொறுப்பாளர் குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தகுதியானர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தெற்கு திமுக மகளிரணி பொறுப்பாளர் சண்முக பிரியா சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக மகளிரணி பொறுப்பாளர் சண்முக பிரியா சீனிவாசன்
திமுக மகளிரணி பொறுப்பாளர் சண்முக பிரியா சீனிவாசன்

By

Published : Feb 4, 2022, 8:51 AM IST

கோயம்புத்தூர்: பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.

கோயம்புத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி செயல்பட்டுவருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூரில் திமுகவால் அதிகளவில் வாக்கு பெற முடியாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுகவினர் செயல்பட்டுவருகின்றனர்.

திமுக மகளிரணி பொறுப்பாளர் சண்முக பிரியா சீனிவாசன்

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தகுதியானர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையென கோவை மாவட்ட தெற்கு திமுக மகளிரணி பொறுப்பாளர் சண்முக பிரியா சீனிவாசன் குற்றஞ்சாட்டிய வாட்சப் ஆடியோ ஒன்று வைரலாகப் பரவிவருகிறது.

மேலும், இது குறித்து செய்தியாளரைச் சந்தித்த அவர், வேட்பாளர் தேர்வில் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர்

ABOUT THE AUTHOR

...view details