கோயம்புத்தூர்:ஒண்டிபுதூர் அடுத்த பட்டணம் செல்லும் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த பாரில் அமர்ந்து மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள பாரில் அமர்ந்து சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்ய மாநகராட்சிப் பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்த ஆய்வின்போது பாரில் அதிக பேர் இருந்ததால் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
பாரில் தகராறு
அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து கற்களைக் கொண்டு தங்களை தாக்க முயன்ற நிலையில், சக பணியாளர்களுக்கு அலுவலர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சிப் பணியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து அடித்து கைகளைக் கட்டி சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.