கோயம்புத்தூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியரை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு மகளிர் காவலர்கள் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் (நவம்பர் 25) நடைபெற்றது. அதில், அவரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.