கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் கோபி நம்பியூரில் ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை கார்த்திகா, மணிகண்டன், முருகன், பிரபு, சதீஷ், இராமசாமி, சாமுண்டீஸ்வரி, ராஜேந்திரன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நடத்தி வந்துள்ளனர். அப்போது பல்வேறு திட்டங்களை அவர்கள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பல திட்டங்கள்
அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 500 நாட்டுக் கோழி குஞ்சுகள் கொடுத்து தேவையான தீவனம், மருந்துகள் வழங்கி மாதம் 8,500 ரூபாயும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக 8,500 ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளனர். மேலும் விஐபி திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுத்து முதலீட்டாளர்களுக்கு 300 நாட்டுக் கோழி குஞ்சுகள் கொடுத்து மாதம் 8,500 ரூபாயும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக 12,000 ரூபாய் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.