கோவை:குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கிடையே அடிதடி நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.
மாணவர்கள் மோதல்: இதில், கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியைச் சேர்ந்த மாணவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது, 'சீனியர்னா பெரிய இவனா நீ..! இதுக்கு மேலயும் அடங்கவில்லை என்றால் நிர்வாணமாக சுத்தவிடுவோம்' என மிரட்டி அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இவ்விவகாரத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.