கோயம்புத்தூர்: பிராங்க் வீடியோ எடுத்து குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடும் யூடியூபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பொது மக்கள் நடமாடடும் இடங்களாகிய ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், காந்திபுரம் வ.உ.சி பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள் போன்ற பல இடங்களில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே பிராங்க் வீடியோ எடுத்து குறும்புத்தனத்தில் ஈடுபட்டு அவற்றை வீடியோவாக பதிவிடுகின்றனர். இதனை யூட்யூப்பில் வெளியிட்டு அதனை கொண்டு பணம் சம்பாதித்தும் வருகின்றனர்.
அதில் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையில் பெண்களை தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடக்கின்றனர். இதனால் பொதுமக்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.