கோயம்புத்தூர்:Coimbatore Police Transferred:கோவை ஆனைக்கட்டி சாலை மாங்கரை சோதனைச் சாவடியின் வழியாகக் கோவையில் கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆனைக்கட்டியில் ஆதிவாசிப் பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசனப் பாய் தயாரித்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குத் தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப்பகுதியை தைப்பதற்குச் சின்ன தடாகத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற டெய்லரிடம் கொடுத்திருந்தனர்.
நேற்று ஐயப்பன் யோகாசனப் பாயை பைக்கில் எடுத்துச்சென்றபோது சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர்கள் ஐயப்பனைத் தடுத்து நிறுத்தி, யோகாசனப் பாயின் பில் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். ஆனால், அவர் பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து காவல் துறையினர் ரூ. 1500 மதிப்பிலான யோகாசன பாயை எடுத்து வைத்துக் கொண்டு ஐயப்பனை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆதிவாசிப் பெண்களின் புகார்