தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம்-கோவை இடையே ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கோவையில் ஓடும்பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சேலம்-கோவை இடையே ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த அரசு பேருந்து நடந்துனர் கைது செய்யப்பட்டார்.

coimbatore-police-arrest-bus-conductor-for-sexually-harassing-woman
coimbatore-police-arrest-bus-conductor-for-sexually-harassing-woman

By

Published : Mar 18, 2022, 9:09 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கோவையில் தங்கி ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவர் நேற்றிரவு சேலத்திலிருந்து கோவைக்கு அரசு பேருந்தில் புறப்பட்டார். இந்த பெண் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்த பெண் துரிதமாக செயல்பட்டு, வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், உறவினர்களும், நண்பர்களுக்கும் காந்திபுரம் பேருந்து நிலையம் விரைந்து, நடத்துனரை பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நடத்துனர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை...103 வயது ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details