தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை மருத்துவ மாணவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - Coimbatore Medical College Students

கோவை அரசு மருத்துவமனை கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சம்பள உயர்வை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழியில் ஆர்பாட்டம் நடத்தினர்.

கோவை மருத்துவ மாணவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை மருத்துவ மாணவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 15, 2021, 3:44 AM IST

சம்பள உயர்வை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊதியம் உயர்த்தி தர ஆர்ப்பாட்டம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், “அரசு உதவி பெறும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் 70,000 வரை மாதம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பயிற்சி செய்யக்கூடிய மாணவர்களுக்கு 20 ஆயிரம் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதை 30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மேலும், ஸ்டைபனையும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைத்து தரப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே, அதனையும் வருடாவருடம் 10% அதிகரித்து தர வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details