தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் கள் சந்தைப்படுத்த முடிவு- தமிழ்நாடு கள் இயக்கம் - கோயம்புத்தூரில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 21ம் தேதி கள் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி தெரித்துள்ளார்.

ஜனவரி 21ம் தேதி கள் சந்தை படுத்த முடிவு  கோயம்புத்தூரில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி  தமிழக எம்.எல்.ஏ க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்ப பட்டது
தமிழ்நாடு கள் இயக்கம்

By

Published : Dec 22, 2021, 11:05 AM IST

கோயம்புத்தூர்:இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்த உணவு தேடும் உரிமை. ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் சந்தைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து அனைத்து எம்.எல்.ஏ க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். இந்த கோரிக்கை நியாயமானது என்றால் ஆதரவு அளியுங்கள்.

இல்லையெனில் வாதிட வாருங்கள். இரண்டும் இல்லையெனில் உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி. இதற்கும் எம்.எல்.ஏ க்கள் பதிலளிக்கவில்லை என்றால் நாங்கள் உங்களை பற்றி விமர்ச்சிக்க வேண்டி வரும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரோடு விவசாயி மகளுக்கு ரூ.3 கோடி: சிகாகோ பல்கலை. உதவித்தொகை

ABOUT THE AUTHOR

...view details