மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நடராஜன் சவுரிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - கோயம்புத்தூர்
கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டார்.
அதில் தொழில் மேம்பாடு, சமூக அமைதி, மீள் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர் நலன், கல்வி மேலாண்மை, விவசாயிகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், பெண்கள் பாதுகாப்பு, சீரான போக்குவரத்து, கலாச்சாரம் உள்ளிட்ட 13 அம்ச வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொழில் முனைவோர் வியாபாரிகள் கட்டிட தொழிலாளர்கள் பெற்றுகொண்டனர். இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீடு விழாவில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், திமுகவின் பொங்கலூர் பழனிசாமி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.