கோயம்புத்தூர்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோயம்புத்தூர் குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு மே மாதம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு வாரங்களுக்கு பிறகு, செப்.6ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.