கோயம்புத்தூர்:நாட்டின் 75ஆவது குடியரசு நாள் விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்வேறு மாநில பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும்.
பாரம்பரிய நடனங்களை ஊக்குவிக்கும்விதமாக மத்திய பாதுகாப்பு - கலாசார அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாரம்பரிய நடனத்தை நடனமாடும் குழுவினர், கல்லூரி மாணவர்கள் தேர்ந்தெடுத்து குடியரசு நாள் விழாவில் நடனமாடுவது வழக்கம்.
இதனையடுத்து, அதன்படி வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள 323 குழுக்களைச் சார்ந்த மூன்றாயிரத்து 870 பேர் ஆர்வம் தெரிவித்தனர்.
இதனையடுத்து போட்டியாளர்கள் தேர்வுசெய்யும் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது இதில் 480 நடனக்கலைஞர்கள் தமிழ்நாடு சார்பில் நடனமாடத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.