கோயம்புத்தூர்:முன்னாள் ராணுவ வீரர்களை (முப்படையினர்) போற்றும்வகையிலும், ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவிபுரியும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கொடி நாள் அனுசரிக்கப்பட்டு உதவித் தொகை வசூலிக்கப்படும்.
அதன் ஒரு பகுதியாகக் கோவையிலும், கொடி நாள் அனுசரிக்கப்பட்டு உதவி புரிய வசூல் தொடங்கப்பட்டது. இதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார்.