கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் டவுன்ஹால், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதத்தின் பெயரால் வாக்கு வங்கி; இஸ்லாமியர்கள் மாற வேண்டும் என சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு! - கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன்
கோவை: மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கோவை பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருக்கும் இஸ்லாமியர்கள் மாற வேண்டும் -சிபி ராதாகிருஷ்ணன்
அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு பிடித்த அணியாக திமுக தலைமையிலான அணி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பிரதமர் வேட்பாளரை கூட அடையாளம் காட்ட முடியாத திமுக கூட்டணியில் 120 கோடி மக்களை எப்படி வழி நடத்துவார்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், மதம் - மொழி - சாதி ஆகியவற்றைக் கடந்து வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.