கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், சரவணம்பட்டியிலிருந்து கீரணத்தம் பகுதிக்கு தன் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தின் ஆட்டோவை முந்தும்போது பிரச்னை தொடங்கியுள்ளது.
அது தொடர்பாக இருவருக்கும், அருண் பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முடிந்து அருண்பிரசாத் தனது ஆட்டோவை டீக்கடைக்கு அருகில் நிறுத்தியுள்ளார். அங்கேயும் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தை கட்டட பணிக்கு பயன்படுத்தும் கரண்டியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த அருண்பிரசாத் அங்கேயே மயங்கிவிழுந்தார்.