கேரளா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஆர்ய வைத்திய சாலை, ஆராய்ச்சி மையம் நடத்தி வந்தவர், டாக்டர் கிருஷ்ணகுமார். கேரளாவில் ஆயுர்வேதம் படித்த இவர் பின்னர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கோவையில் சிகிச்சை மையங்களை நடத்தி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதானது வழங்கப்பட்டது. மேலும் இவரது ஆயுர்வேத சேவைகளைப் பாராட்டி 2011ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநிலத்தில் உள்ள குவேம்பு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.
இவர் ஆர்ய வைத்திய பார்மஸியின் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவி நடத்தி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இவர் இருந்து வந்தார். 68 வயதான கிருஷ்ணகுமார் கடந்த சில நாட்களுக்கு முன் இதய பிரச்னைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.