தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை மேடைக்கேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் - கோயம்புத்தூர்

கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் மேடைக்கு கீழ் நாற்காலியில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை (MLA Vanathi Srinivasan) மேடையில் வந்து அமருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் (CM Stalin) கூறினார்.

கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா
கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா

By

Published : Nov 22, 2021, 4:20 PM IST

கோயம்புத்தூர்: வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு கோவை மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்(MLA Vanathi Srinivasan) மட்டும் வருகை புரிந்திருந்தார்.

மேடைக்கேற்றிய முதலமைச்சர்

முன்னதாக எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மேடைக்கு கீழ் நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை முதலமைச்சர் (CM Stalin) மேடைக்கு அழைத்து மேடையில் அமரச் செய்தார்.

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

பின்னர் மேடையில் வாழ்த்துரை ஆற்றும் படி கேட்டுக் கொண்டதற்கிணங்க வாழ்த்துரை ஆற்றிய வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சரை வரவேற்கிறேன்.

கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். கடினமான மழை அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் நிலையில் இன்னும் தீவிரத்துடன் அரசு செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:Sexual Harassment: பாலியல் வன்முறை... தனியார் பள்ளிகளுக்கு அமைச்சரின் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details