கோயம்புத்தூர்:சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொய்யான அறிக்கையினை வெளிட்டுள்ளார். அதிமுகவினர் ஊழல்வாதிகள் என்று விமர்சனம் செய்துள்ளார். ஊழலுக்கு சொந்தக்காரர்களே திமுகவினர்தான்.
துரைமுருகன் கல்லூரி சுவற்றைத் தட்டினால் ‘ஊழல்... ஊழல்’ என்று சத்தம் வரும் - முதலமைச்சர் தாக்கு துரைமுருகன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது சொத்து விவரத்தையும், இப்போது இருக்கும் சொத்து விவரத்தையும் வெளியிடுவாரா. துரைமுருகனின் கல்லூரி சுவற்றைத் தட்டினாலே ஊழல், ஊழல் என்று சொல்லும். அந்தளவிற்கு ஊழல் செய்து கட்டப்பட்டது அவர் கல்லூரி. வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து அனைவரும் அறிவீர்கள். அதிலிருந்தே துரைமுருகன் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருப்பர்.
'அரசியலில் கமல் ஜீரோதான்'
நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டைக் குறித்து என்ன தெரியும். 70 வயது வரை நடித்து விட்டு ஓய்வு எடுக்கும் நேரத்தில் வந்து அரசியல் செய்கின்றார். நான் 46 ஆண்டு காலம் அரசியலில் இருக்கின்றேன். அவர் நடிப்பில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஜீரோதான்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. நாங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டோம். எங்களது கூட்டணி தொடர்கிறது. எங்களது தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி மந்திரி சபையை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
நடிகர் விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திரையரங்கம் முழுமையாக திறக்கப்படாமல் இருக்கின்றது. அது தொடர்பாக நடிகர் விஜய் என்னை சந்தித்தார் என்று கூறினார்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி குறித்து 3 நாட்களில் பதில் கிடைக்கும்: எல்.முருகன்