தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானப்படை வீரர்களின் குழந்தைகள் மாயம்! தீவிர விசாரணையில் போலீஸார் - சூலூர் காவல் துறையினர் விசாரணை

கோயம்புத்தூர்: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் விமானப்படை வீரர்களின் குழந்தைகள் இருவர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மாணவர்கள் கேடல், வருண்

By

Published : Sep 20, 2019, 12:47 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானதளத்தில் பணிபுரியும் விமானப்படை வீரர்களின் குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கேடல், வருண் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.

நேற்று காலை பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் மாணவர்களின் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைசியாக மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறி வரும் போது பதிவாகிய சிசிடிவி காட்சி

இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் இருவரும் நேற்று காலை சைக்கிளில் பள்ளியில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு இரு மாநில போலீசார் வலைவீ்ச்சு!

ABOUT THE AUTHOR

...view details