நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ” காந்திபுரம், உக்கடம், சுங்கம் சந்திப்பு, கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலைக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுடன், அவர்கள் உயிரையே போக்கி கொள்ளும் நிலைக்கு தள்ளும் இந்த சூதாட்டத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், அதனை நடத்துவோரை கைது செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த முதலமைச்சர், நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்குவது அவரது உரிமை என்றார். மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக தெரிவித்த அவர், இது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், 7 பேரின் விடுதலை குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.